குடிசைவாழ் மக்களுக்கு குளோரோகுயின் மருந்து வழங்க மஹா., அரசு பரிசீலனை

மும்பை : மஹாராஷ்டிராவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குடிசை பகுதிவாழ் மக்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் வழங்கலாமா என மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல பகுதிகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் மஹா., மாநிலத்தில் தான் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமாக உள்ளது. மாநிலத்தில் நோய் தொற்றை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆயினும் கொரோனா பரவ அதிக வாய்ப்பு இருக்கும் குடிசைவாழ் பகுதிகளில் இருக்கும் தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் இருக்கும் மக்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை கொடுக்கலாமா என ஆலோசித்து வருகிறது.