குணமானவரின் ரத்தம் மூலம் சிகிச்சை: சீனா புது முயற்சி

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமானவரின் ரத்தம் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியை சீனா மேற்கொண்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கொரோனாவை குணமாக்கும் மருந்தை கண்டறிய பல ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில் சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தில் இருந்து சிகிச்சை மேற்கொள்ளும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.